tamilnadu

img

களைகட்டிய அன்னூர் ஆட்டுச் சந்தை

களைகட்டிய அன்னூர் ஆட்டுச் சந்தை

கோவை, அக்.18- தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில், அன்னூர் சந்தை மற்றும்  தெடாவூர் கால்நடை சந்தைகளில் ஆடு கள் விற்பனை களைகட்டி வருகிறது. கால்நடைகளை வியாபாரிகள் போட்டிப் போட்டு வாங்கிச் சென்றனர். கோவை மாவட்டத்தின் அன்னூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயமும் ஆடு வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளன. புல்வெளிகள், மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ள தால் ஆடுகள் பெருமளவில் வளர்க்கப் படுகின்றன. வாரந்தோறும் சனிக் கிழமை நடைபெறும் அன்னூர் சந்தை யில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி  மாதம் தொடங்கி, தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில், கோவை,  ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங் களிலிருந்தும், கர்நாடகா, கேரளம் மாநி லங்களிலிருந்தும் ஏராளமான வியாபா ரிகள் சந்தையில் குழுமினர். வெள் ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலை யாடு உள்ளிட்ட பல்வேறு வகை ஆடு கள் விற்பனையாகின. குட்டிகள் ஆயிரம் ரூபாய் முதல் ஐந்து ஆயிரம் ரூபாய் வரையில் விற் கப்பட்டது. அதேநேரம், திடகாத்திர மான உடல்வாகுடன், சற்று எடை அதி கம் உள்ள ஆடுகள் எட்டு ஆயிரம் ரூபாய்  முதல் அதிகபட்சமாக இருபது ஆயிரம்  ரூபாய் வரையில் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. அன்னூர் சந்தை,  தீபாவளி பண்டிகையை எதிரொலிக் கும் வகையில் சனியன்று பரபரப் பாக நடைபெறுகிறது. விவசாயிக ளும், வியாபாரிக ளும் மகிழ்ச்சி யாக வியாபாரம் செய்து வருகின் றனர். சனியன்று ஒரே நாளில் மட் டும் சுமார் ரூ.80  லட்சம் வியாபா ரம் நடைபெற் றது.