மாமல்லபுரத்தில் கியூபா குடியரசின் தூதருக்கு வரவேற்பு
இந்தியாவிற்கான கியூபா குடியரசின் தூதர் யுவான் கார்லோஸ் மார்சன் அகிலேரா செவ்வாய்க்கிழமை (ஆக.12) மாமல்லபுரத்திற்கு வருகை தந்தார். அவரை மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் பாரம்பரிய முறையில் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, கடற்கரை கோவில், கற்சிற்பங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் கோபிகுமார், சிபிஎம் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் சி.ஏ.சத்யா, த.பாஸ்கர், இளையராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.