திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் புதனன்று (அக் 8) முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெண் அங்கி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில்நடைபெற்றது. மாணவர்களுக்கு வெண் அங்கிகளைஅவர்வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர்கள்.ஆர்.சாந்திமலர், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் ஜே.ரேவதி, துணை முதல்வர் என்.திலகவதி, மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
