நேட்டோ விரிவாக்கத்தைத் தடுப்போம் : ரஷ்யா உறுதி மாஸ்கோ, டிச.30- அடுத்து நடக்கவிருக்கும் இருதரப்புக் கூட்டத்தில் நேட்டோ வின் கிழக்கு திசை நோக்கிய பரவலைத் தடுப்பதை நோக்க மாகக் கொண்டு பேசுவோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்யாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், “நேட்டோ ராணுவக் கூட்டணி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி விரிவடைவதை தடுப்பது ரஷ்யாவின் இலக்காகும். அடுத்த கூட்டத்தில் இதை நோக்கமாகக் கொள்ளும் வகையில் எங்கள் பேச்சுவார்த்தை இருக்கும். விரிவாக்கத்திற்காக எந்தவிதமான அறிகுறியையும் அனுமதிக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டார். ஜனவரி 10 ஆம் தேதியன்று ரஷ்யா மற்றும் அமெரிக்கா நேரடிப் பேச்சுவார்த்தை நடக்கப்போகிறது. இதில் அடுத்து கையெழுத்திடவிருக்கும் உடன்பாட்டின் நகலை இறுதிப் படுத்தப் போகிறார்கள்.
ஏற்கனவே கையெழுத்திடப்பட்டிருக்கும் உடன்பாடுகளை ரத்து செய்யும் எந்த முயற்சியையும் அனு மதிக்கக்கூடாது என்பதில் ரஷ்யா உறுதியாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பதைத் தீர்மானித்து வைத்திருப்பதாக செர்ஜி ரியாப்கோவ் கூறியுள்ளார். நடப்பு நிகழ்வுகள் குறித்துப் பேசிய ரியாப்கோவ், “எங்கள் எல்லையில் நிகழும் சம்பவங்கள் குறித்து நாங்கள் கவ லைப்படாமல் இருக்க முடியாது. அதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். நேட்டோ ராணுவக்கூட்டணி விரிவடை வதை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது. அதை நாங்கள் தடுப்பதோடு நிற்கப் போவதில்லை. முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும்” என்றார். அதேவேளையில், ரஷ்யாவின் நோக்கம் நிறைவேறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் ரியாப்கோவ் எச்ச ரிக்கையும் விடுத்துள்ளார். தங்கள் நோக்கத்திற்கு இணங்கும் வகையில் அமெரிக்காவின் செயல்பாடு இருக்காது என்று கூறிய அவர், எங்களுக்கும் அமெரிக்காவுக்கும், எங்களுக்கும் நோட்டோவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன என்றார்.