tamilnadu

img

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கிட போராட்டங்களை முன்னெடுப்போம்!

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கிட போராட்டங்களை முன்னெடுப்போம்!

 இந்தியாவில் சுமார் 1 கோடிப் பேரும்,  தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் பேரும் சாலையோர வியாபாரத் தில் ஈடுபட்டுள்ளனர். படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்கள், பெண்கள், பட்டியலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் எனச் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள பலரின் சொற்ப வாழ்வாதாரமாக இத்தொழில் உள்ளது. கந்து வட்டிக்குக் கடன் பெற்று தொழில் செய்யும் இந்த வியாபாரிகள், உள்ளூர் சமூக விரோதிகள், நகராட்சி அதிகா ரிகள், காவல்துறையினரின் மிரட்டல்கள், கடைகளை அப்புறப் படுத்துதல், தாக்குதல் மற்றும் பொய் வழக்குகள் போன்ற  அநாகரிகச் செயல்களால் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். சட்டம்: அமலாக்கத்தில் உள்ள ஜனநாயகப் படுகொலை இப்பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாக, 2014-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு “சாலையோர வியாபாரிகள் வாழ்வாதா ரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப் படுத்துதல் சட்டம்” இயற்றியது. இச்சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட, 2015-ல் தமிழ்நாடு அரசு செயல்திட்டம் மற்றும் விதிகளை உருவாக்கியது. இதன்மூலம் வியாபாரிகளைக் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்குதல் மற்றும் நகர விற்பனைக்குழு (வென்டிங் கமிட்டி) அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், தற்போது இரண்டாவது முறையாக நகர விற் பனைக்குழு அமைத்திடும் தேர்தலில், சில நகராட்சி, பேரூராட்சி களில் ஜனநாயக விரோதமாகத் தேர்தல் நடந்துள்ளது. விளம்பரப்படுத்துதல், வியாபாரிகள் பட்டியலை வெளியிடு தல் போன்ற சட்ட விதிகளைப் பின்பற்றாமல், உள்ளூர் ஆளுங் கட்சியைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துக் கொள்வது போன்ற செயல்கள் நடந்துள்ளன. தேர்தல் நடைபெறாத இடங்களிலும் ஜனநாயகப்பூர்வமாகத் தேர்தல் நடப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தை மீறும் அதிகாரிகள் சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, நகர விற்பனைக்குழுவே அதிகபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும். வியாபாரச் சான்றிதழ் வழங்குவது, முறைப் படுத்துவது, அப்புறப்படுத்துவது என அனைத்து முடிவுகளை யும் இக்குழுவில்தான் எடுக்க வேண்டும். ஆனால், இச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய நகராட்சி ஆணையர்களே, குழுவைக் கூட்டாமல் நேரடியாகச் சென்று கடைகளை அப்புறப் படுத்துவது, பொருட்களைச் சேதப்படுத்துவது போன்ற அத்துமீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சட்டம் இருந்தும் வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் நோக்குடன், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 25 அன்று மதுரையில் கூடுகிறது. மதுரையில் சங்கமிப்போம்! சரித்திரம் படைப்போம்!! வாரீர்!!!