அதிமுக - பாஜக கூட்டணியை முழுமையாகத் தோற்கடிப்போம்;தமிழகத்தின் வளர்ச்சி - உரிமைகளைப் பாதுகாப்போம்!
சென்னை, ஏப். 6 – தமிழக மக்களின் முன்னேற் றம், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் உரிமைகளைப் பாதுகாப்போம்; இதற்குத் தடையாக இருக்கும் அதிமுக - பாஜக கூட்டணியை முழுமையாகத் தோற்கடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்ற 17-ஆவது பொதுத்தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரச்சாரப் பாடல்களை, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திங்களன்று (ஏப்.6) சென்னையில் வெளியிட்டார். கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராம கிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி, வே. ராஜசேகரன் ஆகி யோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது, பெ.சண்முகம் செய்தியாளர்க ளுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது : சட்டமன்றத்தில் வலியுறுத்துவோம் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில், மத்தி யக்குழு உறுப்பினர் என். குண சேகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுகுமாறன், டி.ரவீந்திரன், செ. முத்துக் கண்ணன் ஆகியோர் இணைந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளனர். சமூகத்தின் பல்வேறு தரப்பி னரிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகள், ஆலோசனை கள், துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் உள்ள அம்சங்களை நிறைவேற்றும் வகையில் சட்டமன்றத்தில் சிபி எம் உறுப்பினர்கள் வலியுறுத்து வார்கள். திமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்ப தற்கான அனைத்து விதமான சூழலும் உள்ளது. தோழமை உற வைப் பயன்படுத்தியும் இவற்றை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்போம். தென்னகத்தில் பாஜகவை காலூன்ற விட மாட்டோம்! தென் மாநிலங்களில் காலூன்ற பாஜக தொடர்ச்சியாக தீவிரமான முயற்சிகளில் ஈடு பட்டு வருகிறது. அதிமுக துணை யோடு தமிழகத்தில் காலூன்றி, ஆட்சியில் பங்கேற்க தீவிர முனைப்போடு உள்ளது. அதற்கு ஆதரவாக பாமக உள்ளிட்ட கட்சி கள் உள்ளன. இதனை முறியடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து திமுக தலைமையில் அணி யாக நிற்கிறோம். இந்த மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் வாயிலாக அதிமுக - பாஜக கூட்டணியை முழுமையாக தோற்கடிப்போம். சட்டமன்றத் தில் இடதுசாரிகளின் எண்ணி க்கையை அதிகரிப்போம். சாத்தியமான வாக்குறுதிகளே அறிக்கையில் இடம்பெற்றுள்ளன தமிழக மக்களின் வாழ்க்கை யில் முன்னேற்றத்தையும், மாநி லத்தின் வளர்ச்சியையும், மாநில உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. கூட்ட ணிக்குத் தலைமை தாங்கும், திமு கவின் தேர்தல் அறிக்கையும், நடைமுறை சாத்தியம், மாநி லத்தின் நிதிநிலைமை, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. ஆனால் பல்வேறு அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர் தல் அறிக்கைகள், பொய் வாக்கு றுதிகள், ஆசை வார்த்தை களைக் கூறி ஆட்சி அதிகா ரத்தை கைப்பற்றும் வகையில் உள்ளது. உழைக்கும் மக்களின் குரலை எதிரொலிக்கவே பிரதிநிதித்துவம் மாறாக, உழைக்கும் மக்க ளின் உரிமைக் குரலை எதிரொ லிப்பதற்கான வாய்ப்பாகவே சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. கடந்த 10 ஆண்டு களாக ஒன்றிய பாஜக அரசு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது, நிதி வழங்குவதில் பார பட்சம் காட்டுவது, திட்டங் களுக்கு அனுமதி மறுப்பது, மொழித்திணிப்பு செய்வது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்கெதிராக உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா அவர்களே பேசியுள்ளார். அவரின் கருத்தை வரவேற்கிறோம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள துறைகளில், ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடி வெடுக்கிறது. இதனைத் தவிர்த்து, மாநில அரசுகளைக் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். தமிழக சட்டமன்றத் தில் தற்போது மக்கள் பிரச்ச னைகளை பேசவும், சட்டங்கள் மீது உரிய விவாதம் நடத்தவும் போதிய நேரமில்லாத நிலை உள்ளது. எனவே, தமிழக சட்ட மன்ற கூட்டம் நடத்தும் நாட்களை யும், விவாத நேரத்தையும் அதிகரிக்க வேண்டும். 70 சதவிகித மக்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களிக்கின்றனர் ஒன்றிய பாஜக அரசு, ஆளு நர்கள் மூலமாக தொந்தரவு கொடுத்து வருகிறது. ஏற்கென வே இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு, தற்போ தைய ஆளுநர் அர்லேக்கர் ஆர்எஸ் எஸ் பிரச்சாரகராக நடந்து கொள் கிறார். ஆர்எஸ்எஸ் நிகழ்வு களில் நேரடியாக பங்கேற்பது போன்ற அவரின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. அரசிய லமைப்புச் சட்டத்தின்படி பதவி யேற்பவர்கள் அரசியல் சார்போடும், அரசியல் சாசனத் திற்கு எதிரான கொள்கை கொண்ட ஆர்எஸ்எஸ்-க்கு சாதகமாகவும் நடந்து கொள்வ தை ஏற்க முடியாது. இதனை ஆளுநர் மாற்றிக் கொள்ள வேண்டும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை தேர்தல் சீர்திருத்தம் என் கிறது பாஜக. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை விகிதாச்சாரப் பிரதிநிதித் துவத்தைக் கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்து கிறோம். நாட்டில் 70 சதவிகித மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கின்றனர். இருப்பி னும், 30 சதவிகித வாக்கை பெறும் அந்தக் கட்சி ஆட்சியில் அமர்கிறது. இதன்மூலம் 70 சத விகித மக்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லாமல் போகிறது. ஆகவே, கட்சிகள் பெறும் வாக்கு களின் சதவிகிதத்திற்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். இயற்கை வளங்களை அரசே கையாள வேண்டும் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து தேர்தல் பத்திரம் என்ற முறையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பெறுகின்றனர். இதனை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடுத் தது. பாஜக உள்ளிட்ட கட்சிகள், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படு த்தி ஒப்பந்தம் மற்றும் சலுகை தருகிறோம் என்று கூறி நன்கொ டைகளைப் பெறுகின்றன. எனவே நிலவும் தேர்தல் அரசியலில் பண ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும். வரிகளின் மூலமே மாநில அரசின் வருவாய் திரட்டப்படுகிறது. இயற்கை வளங்கள் ஒப்பந்தம் மூல மாக தனியாருக்கு விற்கப்படுகிறது.
இதற்கு மாறாக, தாதுமணல், கிரானைட் உள்ளிட்ட அரிய கனிமங்களை அரசே நேரடியாக வெட்டியெடுத்து விற்று வருவா யைப் பெருக்க வேண்டும். கேரளத்தில், இடது ஜனநா யக முன்னணி அரசானது, சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதேபோன்று ஒரு சட்டத்தை தமிழக அரசும் நிறைவேற்ற வேண்டும். 2 கோடி வேலை உறுதியை மறந்து விட்ட மோடி! வேலையின்மை பெரும் பிரச்சனையாக உள்ளது.
தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்பை வழங்கும் சிறு குறு தொழில்கள், ஒன்றிய அரசின் கொள்கை, ஜிஎஸ்டி, மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இத் தொழில்களை பாதுகாக்க ஊக்குவிக்க, நிதி ரீதியான உதவிகளை ஒன்றிய - மாநில அரசுகள் செய்ய வேண்டும். ஒன்றிய, மாநில அரசு காலிப்பணியி டங்கள் பல்லாண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றை நிரப்புவதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை வழங்க முடியும்.
ஆனால், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொன்ன தையே பிரதமர் மோடி மறந்து விட்டார். தனியார் துறை யில் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வர வேண்டும். இதையும் தாண்டி வேலையில்லாக்கால நிவாரண மாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இளைஞர்களிடம் அரசியல் ஆர்வத்தையும், ஒழுங்கையும் உருவாக்கக்கூடிய வகையில் பள்ளி முதல் பல்கலைக் கழகங்கள் வரை மாணவர் பேர வைத் தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு பெ. சண்முகம் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக் கும் பதிலளித்துப் பெ. சண்முகம் பேசினார். போதைப் பொருளை ஒழிப்பில் கூட்டுச் செயல்பாடு அவசியம் “நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுவது போன்று சட்டமன்ற நிகழ்வுகளும் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். 2021-ஆம் ஆண்டு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி களில் 90 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டதாக அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சில திட்டங் களை நிறைவேற்ற ஒன்றிய அரசு அனுமதி தர வில்லை. ஒருசிலவற்றை தற்போது செயல்படுத்த முடியவில்லை என ஒப்புக் கொண்டுள்ளனர். வாக் குறுதிகளில் பெரும்பகுதியை நிறைவேற்றி உள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையிலும் சாத்தியமான வற்றை திமுக கூறியுள்ளது. தவெக தலைவர் விஜய் கூறுவது போன்று பிறக்கிற குழந்தைகளுக்கெல் லாம் ஒரு பவுன் தங்கம் தருவது நடைமுறை சாத்திய மில்லை
. சட்டமேலவை அமைக்க வேண்டும் என்பதை ஏற்கவில்லை. தற்போது உள்ள இடங்களிலும் அவற்றை ஒழிக்க வேண்டும். மதுபான உற்பத்தி, டாஸ்மாக் கடைகளின் எண் ணிக்கை, விற்பனை நேரம், விற்பனை அளவு போன்றவற்றை குறைக்க வேண்டும், குறிப்பிட்ட வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்கக்கூடாது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து
தமிழ கத்தில் விற்பனை செய்கின்றனர். எனவே, ஒன்றிய - மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்பட்டால் தான் போதைப் பொருளை ஒழிக்க முடியும். நாடு தழு விய அளவில் அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பூரண மதுவிலக்கு நடைமுறை சாத்திய மில்லை. குடி நோயாளிகளுக்கு மறுவாழ்வு மையம் உருவாக்குவது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு ஆதரவு தர வேண்டும். குடிப்பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆசிரியர் - அரசு ஊழியர்கள் வாக்கு திமுக அணிக்கே! பழைய ஓய்வூதியத் திட்டடத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி 23 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் - அரசு ஊழியர்களின் போராட்டம், சிபிஎம் போன்ற கட்சிகளின் வலியுறுத்தலால் உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல் படுத்தி உள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஆதரவு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குத்தான் இருக்கும். காவல்நிலையச் சாவுகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் தனியார்மயம், ஒப்பந்தம், வெளிமுகமை (அவுட் சோர்சிங்) போன்ற பல்வேறு வகையில் நிரந்தரப் பணி களில் பணியமர்த்தப்படுகின்றனர். இதனை ஒன்றிய அரசும், மாநில அரசும் செய்கிறது. இதைத் தவிர்க்க வேண்டும்.
நிரந்தர பணியிடங்களில் நிரந்தர முறை யில் பணி நியமனம் நடைபெற வேண்டும். என்று வலி யுறுத்துகிறோம். சாதி ஆணவக்கொலைக்கு தனிச் சட்டம் வேண்டுமென்று பல்லாண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. அதனால் தான் கே.என். பாஷா ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவல்நிலையச் சாவுகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். காவல்துறை பயிற்சியின்போதே மனித உரிமைகள் குறித்து வகுப்பெடுக்க வேண் டும். இதனையும் மீறி காவல்நிலையச் சாவுகள் நடந் தால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த பகுதியினராக இருந்தாலும் அவர் கள் போராடி பெற்ற உரிமைகள், அரசாணைகள் முழுமையாக அமலாக்கப்பட வேண்டும்.
சமூக சீர்திருத்தத்துறை ஏற்படுத்தப்பட வேண்டும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி பதிலளிக்கையில், “ஒன்றிய அரசு தனது வரி வருவா யில் மாநிலங்களுக்கு பங்கு தருவதில் பெரும் வஞ்ச கம் நிகழ்கிறது. ஒன்றிய அரசு ‘செஸ்’ என்ற பெயரில் பெரும் பகுதி வருவாயை ஈட்டுகிறது. அதிலும் மாநில அரசுகளுக்கு பங்கு தர வேண்டும். தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கிராமப்புறங்களில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். வன்முறை வழக்குகளில் முறையாக பதிவு செய்யாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைஞர் ஆட்சியில் சமூக சீர்திருத்தத் துறையை என்று ஒன்று இருந்து. அந்தத்துறை விழிப்புணர்வை உருவாக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தது. எனவே. சமூக சீர்திருத்தத் துறையை கொண்டு வர வேண்டும். கொள்கை, அரசி யல் நெறிமுறைகளை இளைஞர்கள் விவாதிக்க வேண்டும். சிந்தித்து, கேள்வி கேட்க வேண்டும் என்று இடதுசாரி இயக்கங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு நேர்மாறாக ஒரு கூட்டம் உள்ளது. அறிவு சார்ந்த, அரசியல் சார்ந்த இளைஞர்களை அதிகரிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். பத்திரிகையாளர் நல வாரியத்தை ஆணையமாக மாற்ற வலியுறுத்தி உள் ளோம்.” இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.
