மாணவர்களிடம் சாதி பாகுபாடு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
சென்னை, செப்.20 - மாணவர்களிடம் சாதி பாகுபாடு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை ஜவ ஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக் கிழமை (செப்.20) முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்து, பயிற்சிக் கையேட்டை வெளி யிட்டார். மேலும், ரூ.277 கோடி மதிப்பீட்டில் பாரத சாரண- சாரணியர் தலைமை அலுவலகக் கட்டிடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டிடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இத்துடன், ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார். பிறகு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், “நாம் வாழும் சமூகத்தை கட்டமைக்கும், குழந்தை களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பணியே ஆசி ரியர் பணி என்று குறிப்பிட்டார். ஆசிரியர்கள் வெறும் பாடத்தை மட்டும் சொல்லித் தருபவர்கள் அல்ல; தமது கல்வியையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள் பவர்கள் என்றும் வலியுறுத்தினார். மாணவர்களிடம் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் உருவாகாமல் ஆசிரி யர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முதல மைச்சர் அறிவுறுத்தினார். சமத்துவம், சமூக நீதி தேவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும், எதற்கு, எப்படி என்று கேட்கும் பகுத்தறிவு மிக்க தலைமுறையாக மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூகுள், செயற்கை நுண்ணறிவிடம் எதுவாக இருந்தாலும் கேட்கலாம் என நம்பி இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் கூறினார். மனித சிந்த னைக்கும், செயற்கை நுண்ணறிவு சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிர மணியன், எஸ்.எம்.நாசர், அன்பில் மகேஸ் பொய்யா மொழி, சி.வி.கணேசன், முதன்மை செயலாளர் பி. சந்திரமோகன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ச.ஜெயந்தி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.