tamilnadu

img

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

சேலம், அக். 21 - மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,000 கனஅடியில் இருந்து 35,000 கன அடியாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து செவ்வாயன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 30,500 கன அடியாக இருந்த நிலையில், அது  மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பிற்பகல்  3 மணியில் இருந்து நீர் திறப்பு 35,000 கன அடியாக அதி கரிக்கப்பட்டது. நடப்பாண்டில் மட்டும் மேட்டூர் அணை தொடர்ந்து 7-ஆவது முறையாக அதன் கொள்ளளவை (120 அடி) எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.