போதைப்பொருட்களுக்கு எதிரான போர்: முன்னணியில் தமிழ்நாடு! முதலமைச்சர் பெருமிதம்
சென்னை: இந்தியாவில் போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “மாநிலத்தின் மீது அவதூறு பரப்பும் முயற்சிகள், உண்மை யான தரவுகள் மூலம் வீழ்த்தப்பட்டுள்ளது. தீவிர சோத னைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளே இதற்கு ஆதாரமாக உள்ளது” என தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2022 ஆம் ஆண்டு 80 சதவீதமாக இருந்த நிலையில், 2025 ஜூன் மாதம் 88 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், மொத்தம் 4,889 வழக்குகளில் 3,493 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் குறிப் பிட்டுள்ளார். இது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மான எண்ணிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.