tamilnadu

img

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

இம்பால், செப். 22 - பாஜகவின் பிளவுவாத அரசியலால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 5 மாதங்களாக கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. வன்முறைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-யை நெருங்கி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல ஆயி ரம் குடும்பங்கள் சொந்த மாநிலத்தி லேயே அகதிகளாக வாழ்ந்து வரு கின்றனர்.  ஆனால் மணிப்பூரை ஆட்சி செய்யும் பாஜக அரசு மாநிலத்தில் அமைதி நிலவு வதாக கூறி நிலைமையை திசை திருப்பி வருகிறது. கடந்த 2 வாரத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்த நிலை யில், பலர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  2 நாட்களுக்கு முன்பு மணிப்பூர் பள்ளத்தாக்கு பகுதியில் மெய்டெய் அமைப்பு பந்த் நடத்தியது. இந்த பதற்றம் தணிவதற்குள் இம்பால் மேற்கு பகுதியின் சிங்ஜமேய் காவல்நிலை யத்தில் பொதுமக்களுக்கும் போலீசா ருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த பகுதி யில் உள்ள ஒரு காவல் அதிகாரியின் இல்லம் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.