tamilnadu

இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்

இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்

சு.வெங்கடேசன் உள்ளிட்ட 3 எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல்

மதுரை, ஆக.10 - மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் திட்ட நிகழ்வுக்கு நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற  உறுப்பினர்கள் எவரையும் அழைக் காத இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), தங்க தமிழ்ச்செல்வன் (தேனி) ஆகியோர் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 12, 2025  அன்று ரூ.1100 கோடி அளவி லான “பெண்களுக்கு அதிகார மளித்தல்; மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு கடன் திட்டம்” எனும் நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதா னத்தில் நடைபெற்றுள்ளது. இந்த  நிகழ்ச்சியில் ஒன்றிய நிதித்துறை செயலாளர் எம்.நாகராஜ் பங்கேற் றுள்ளார்.  மதுரை, விருதுநகர், தேனி  ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி களுக்காக நடைபெற்ற இந்நிகழ்வு பற்றி, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை என்பதோடு, அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. அப்பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற  உறுப்பினர்களும் அழைக்கப்பட வில்லை. அரசின் திட்டங்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்கப்படுவதும், அவர்கள் ஈடுபடுத்தப்படுவதும், அவர்களின் ஒருங்கிணைப்பு வாயி லாக மக்கள் தொடர்பு வலுப் படுத்தப்படுவதும் மக்கள் பிரதிநிதி களின் சிறப்புரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்தியன் வங்கி இத்த கைய சிறப்பு உரிமையை அவ மதித்துள்ளது. இது நாடாளு மன்ற உறுப்பினர்களின் உரிமை களையும், ஜனநாயக மரபுகளை யும் மீறியுள்ள செயலாகும். இது மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கை அல்ல. ஆகவே இந்தியன் வங்கி தலைவரிடம், இத்தகைய உரிமை  மீறலுக்கான விளக்கம் கோரப்பட  வேண்டுமென்றும், மக்கள் பிரதி நிதிகள் அரசுத் திட்ட அமலாக்கத் தில் கலந்தாலோசிக்கப் படுவதை யும், ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப் படுவதையும் உறுதி செய்ய வேண்டு மென்று கோரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்களிடம் உரிமை மீறல் தீர்மானத்தை அளித் துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்