tamilnadu

img

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தொடர்ந்து மன உளைச்சல் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல நிர்வாகத்திற்கு கண்டனம்

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தொடர்ந்து மன உளைச்சல் போக்குவரத்துக் கழக விழுப்புரம்  மண்டல நிர்வாகத்திற்கு கண்டனம்

கள்ளக்குறிச்சி, ஆக. 4 - ஓட்டுநர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை மன உளைச்சல் ஏற்படுத்தி கடும் தண்டனை வழங்கும் விழுப்புரம் மண்டல நிர்வாகத்தை கண்டித்து உளுந்தூர்பேட்டை பணிமனை முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் பணிமனையில் ஓட்டுநர் பணி யில் இருந்தபோது பசி மயக்கம் ஏற்பட்ட நிலையில் தேநீர் குடிக்க கடையில் பேருந்தை நிறுத்திய தற்காக பரிசோதகர்கள் மெமோ வழங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகி யோர் பணிமனையில் அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கூறியும் அதனை அதிகாரிகள் ஏற்கவில்லை. தவறு இழைக்காத தங்களுக்கு சஸ்பெண்ட் மற்றும் பணியிட மாற்றம் என நிர்வாகம் தண்டனை வழங்குவதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரண மாக பணிமனையில் உயர் மின் விளக்குக் கம்பத்தில் ஏறி சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக தொழிற்சங்கத் தலைவர்கள், சக தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் சமாதான முயற்சியால் அவர்கள் தற்கொலை முடிவை கைவிட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விழுப்புரம் மண்டல நிர்வாகம் வசூல் குறைவு, டீசல் இலக்கை தாண்டிவிட்டாய் என்று நடத்துனர், ஓட்டுநர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் கூடுதல் தண்டனை வழங்குவது அதிகரித்து வருகிறது. இதேபோல் விடுப்பு மறுப்பது, ஆப்செண்ட் போடுவது, ஊதியத்தில் பிடித்தம் செய்வது போன்ற கடும் தண்டனைகள் வழங்குவதும் கூடுதலாகி கொண்டே வருகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் விழுப்புரம் சம்பவம் நடைபெற்றுள்ளது. பணிமனை தலைவர் கே.முருகன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் மண்டல துணைப் பொதுச்செயலாளர் கே.சுந்தர பாண்டியன், மண்டல செயலாளர் வி.சாமிநாதன், பணிமனை செயலாளர் கே.திருமுருகன் உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.