tamilnadu

img

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கிராம நிர்வாக அலுவலர் பலி

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கிராம நிர்வாக அலுவலர் பலி

 தேனி, அக்-10- போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மதுரையை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரின் சடலத்தை தீயணைப்பு துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர். இதுகுறித்து குரங்கணி காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  தேனி மாவட்டம், போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் அப்பிபட்டி வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். போடி மீனாட்சிபுரம் செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவுக்காக பாலமுருகன் வந்துள்ளார். தன்னுடன் வேலை செய்யும் கிராம நிர்வாக அலுவலர்கள்  முத்துக்காளை,காளிதாஸ், சக்கரை, சக்திவேல், மதுரைவீரன் ஆகியோரையும் திருவிழாவுக்கு அழைத்து வந்துள்ளார். திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு வியாழக்கிழமை போடி வடக்குமலை கிராமம் ஊத்தாம்பாறை புலம் கருப்பசாமி கோயில் அருகே நீர்வீழ்ச்சியில் பாலமுருகன், அவருடன் வந்த 5 கிராம நிர்வாக அலுவலர்கள், மீனாட்சிபுரத்தை சேர்ந்த 6 பேர் என 12 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பெய்த பலத்த மழையால் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுதாரித்துக் கொண்ட அனைவரும் கரையேறினர். அப்போது அப்பக்கரை கிராம நிர்வாக அலுவலர் மதுரைவீரன் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போடி தீயணைப்பு துறையினருக்கும், குரங்கணி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை இரவு வரை மதுரைவீரனை தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் தேடியபோது அப்பகுதியில் பாறையிடுக்கில் மதுரைவீரன் சடலம் சிக்கியிருப்பதை கண்டுபிடித்து மீட்டனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மதுரைவீரன் இறந்து போனது தெரியவந்தது. சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள் கூராய்வுக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போடி குரங்கணி காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து