tamilnadu

img

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை

சென்னை,நவ.29- தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராமாபுரத்தில் ராமச்சந்திரா தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.  இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அடிக்கடி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதனன்று (நவ.29) வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், விஜயகாந்த் உடல் நலத்தில் நல்ல  முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் தற்போது உடல்நிலை சீரான  நிலையில் இல்லாததால், அவருக்கு  நுரையீரல் சிகிச்சைக்கு உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.