tamilnadu

img

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி படம்

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி படம் வென்றது. இதே திரைப்படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கும் சிறப்பு விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைப்பட தேசிய விருதை தமிழ் நடிகர் நடித்த “ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்” படம் வென்றுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கும், ஆர். பார்த்திபன் இயக்கி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா... ’ என்ற பாடலுக்கு ஸ்ரேஷா கோஷல் சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றுள்ளார். இயக்குநர் பி.லெனினின் “சிற்பிகளின் சிற்பங்கள்” படத்துக்கு சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான விருதும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.