tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அக்.24 முதல்வர் தென்காசி பயணம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு சென்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவடைந்த திட்டங்களை  தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்  வருகிறார். அந்த வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற் பதற்காக தென்காசி மாவட்டத்திற்கு செல்கிறார். முதலமைச்சர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கு, லத்தூர்  விலக்கு பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில்  தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தூய்மைப்படுத் தும் பணி, பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரு கின்றன. இந்த இடத்தை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

காரை மறித்து தகராறு: திட்டமிட்ட சதி தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு '

சென்னை: சென்னை பார் கவுன்சில் அருகே காரை மறித்து அக்.7 அன்று ஒருவர் தகராறில் ஈடுபட்ட  விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் தொல்.திருமாவளவன் தற்போது குற்றச்சாட்டு களை முன்வைத்துள்ளார். அன்று நடந்த சம்பவத்தின் காணொலி வைரலான நிலை யில், திருமாவளவனின் காரை இருசக்கர வாகன ஓட்டுநர்  ஒருவர் மறித்ததாகவும், பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டதாக வும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.  தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் திருமாவளவன் வெளி யிட்ட பதிவில், “உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறி ஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 7 அன்று நடந்த  நிகழ்வு தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி  என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வினர் இதன் பின்னணியில் இருப்பது, அவரது விசார ணையில் உறுதிபடத் தெரிவதாகவும்” தெரிவித்துள்ளார். எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். இதனை ஒளிபரப்பு  செய்த தனியார் தொலைக்காட்சிகளைச் சார்ந்தவர்களை யும் முழுமையாக ஐயமற உடனடியாக விசாரிக்க வேண்டு மெனக் கோரியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கும்  விடியல் பயணத் திட்டம்  

சென்னை: மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், மாற்றுத் திறனாளி களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலி னின் சுதந்திர தின அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி, அவருடன் வருபவர் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதரண  கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.