tamilnadu

img

வீடுகளுக்குச் சென்று  சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவர்கள்

மதுரை:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரையில்  கால்நடை மருத்துவர்கள் வீட்டிற்கே சென்று  கால்நடைகளுக்கு மருத்துவம் செய்து வருகிறார்கள் .
இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள்   கூறுகையில் தற்போது உள்ள சூழ்நிலையில் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவர்கள் மற்றும் உதவியாளர் எண்களை கால்நடை பயனாளிகளுக்கு வழங்கியுள்ளோம். அவர்கள் கால்நடைக்கு என்ன நோய் தொற்று உள்ளது என்பது குறித்த விளக்கங்களை கூறினார்கள் என்றால் நோயின் தன்மை அறிந்து நேரில் சென்று வீடுகளிலேயே வைத்து சிகிச்சை செய்து வருகிறோம் என்றனர். மதுரை விளாச்சேரி பகுதியில் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிவக்குமார் அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார்.