மாநில மாநாடு நோக்கி வெண்மணி தியாகிகள் சுடர்
நாகப்பட்டினம், அக். 11- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 ஆவது மாநில மாநாடு, ஓசூரில் நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டிற்கு வர்க்க போராட்டத்தின் அடையாளமாக திகழும் கீழ்வெண்மணியிலிருந்து தியாகிகள் சுடரை, அக்.11 (சனிக்கிழமை) அன்று கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி எடுத்துக் கொடுக்க, மாநில செயற்குழு உறுப்பினர் டி.அருள்தாஸ் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் துணை ஒருங்கிணைப்பாளர் எம். ஜோதி பாஸ் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி. அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் ஏ. சிவகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். முத்தையன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்திரகுமார், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தினேஷ் மற்றும் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
