தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்
சென்னை, ஆக. 31 - தமிழ்நாடு காவல்துறை யின் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, தற்போது நிர்வாகப் பிரிவு டி.ஜி.பி.யாக பணி யாற்றும் வெங்கட்ராமன் கூடுதல் பொறுப்பாக மாநில காவல்துறைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் ஞாயிற்றுக் கிழமை (ஆக.31) பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கான வழியனுப்பு விழா வெள்ளிக்கிழமை (ஆக.29) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பதவி விலகிய சங்கர் ஜிவால் தமிழ்நாடு காவல்துறையில் ஆற்றிய சிறப்பான பணியை பாராட்டும் வகையில், புதி தாக உருவாக்கப்பட்டுள்ள தீய ணைப்பு ஆணையத்தின் தலைவ ராக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை யகத்தில் புதிய பதவியை ஏற்க உள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் சங்கர் ஜிவால் தனது பொறுப்புகளை, புதிய பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமனிடம் ஒப்படைத் தார். மேலும், ஓய்வுபெற்ற சைலேஷ்குமார் யாதவின் இடத்தில், டி.ஜி.பி. வினித் வான்கடே காவல்துறை வீட்டுவசதி நிறுவன புதிய இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்.