tamilnadu

img

வெம்பக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்விலும் தங்க அணிகலன்

வெம்பக்கோட்டை, ஜூன் 6- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்  டாம் கட்ட அகழ்வாராய்ச்சி யில் குமிழ் வடிவ தங்க அணி கலன் மற்றும் தங்க பட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழ்வா ராய்ச்சி பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை சுடுமண் வணிக முத்திரை, சுடுமண் புகைப் பிடிப்பான், கல்லால் ஆன  எடைக்கல், செப்பு நாணயம்,  கண்ணாடி மணிகள், சுடு மண் காதணி, யானை தந்தத்  தால் ஆன பகடைக்காய், அழ கிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநயமிக்க சங்கு  வளையல், சுடுமண்ணா லான அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய காதணி மற் றும் தக்கலி ஆகியவை கண்  டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 6 செவ்வாய்க்கிழமை அக ழாய்வுப் பணிகள் நடைபெற்  றது. அப்போது, 2 கிராம்  எடையுள்ள தங்க பட்டையும்,  2.2 கிராம் அளவிலான அழ கிய வேலைப்பாடுகளுடன் கூடிய குமிழ் வடிவ தங்க  அணிகலனும் கண்டெடுக் கப்பட்டது. இதன் மூலம் இப்  பகுதியில் வாழ்ந்து வந்த  பண்டைய கால மனிதர்கள்  கலைநயமிக்க தங்க அணி கலன்களை உருவாக்குவ தோடு, அதை அணிந்து நவ நாகரீக வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள் எனத் தெரிய வந்துள்ளதாக தொல்  லியல் துறையினர் தெரி விக்கின்றனர். முன்னதாக நடைபெற்ற முதற்கட்ட அகழாய்வில் தங்க அணிகலன் கண்டெ டுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட அகழாய்வி லும் தங்க அணிகலன் கண்  டெடுக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

;