மாதர் சங்கத்தின் வேதாரண்யம் தெற்கு ஒன்றிய பேரவை
நாகப்பட்டினம், ஜூலை 26- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் தெற்கு ஒன்றிய பேரவை சனிக்கிழமை, ஒன்றியத் தலைவர் எம்.சுமதி தலைமையில் வேதாரண்யம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. எஸ்.வி.ஏ. வெற்றிச் செல்வி கொடியேற்றினார். கே.லதா வரவேற்புரையாற்றினார். வி.எம்.சி. சுகன்யா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ். சுபாதேவி துவக்கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் கே.டி.எம். சுஜாதா வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் டி. லதா நிறைவுரையாற்றினார். பி. நிகிதா நன்றியுரையாற்றினார். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடங்கள், பள்ளி, கல்லூரியில் புகார் பெட்டி மற்றும் கழிவறை வசதிகள் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டன.