tamilnadu

img

வலங்கைமான் - தீண்டாமை சுவர் இடிக்கப்படுமா

வலங்கைமான் - தீண்டாமை சுவர் இடிக்கப்படுமா

திருவாரூர் மாவட்டம், வலங்கை மான் பேரூராட்சியில் 200 மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்று சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டுவதாக அமைந்துள்ளது. பள்ளி கள், பணியிடங்கள் மற்றும் பொது வசதிகளுக்காக அணுக முடியாமல் பொதுப் பாதையை ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நபர் துண்டித்ததாக பட்டி யல் சமூக மக்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். சுவரின் பின்னணி கிட்டத்தட்ட 10 அடி உயரமுள்ள இச்சுவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வலங்கைமான் டவுன் பஞ்சா யத்தின் 14ஆவது வார்டில் உள்ள கோவில்பத்து பகுதியில் கட்டப்பட்டது. கோவில்பத்து மற்றும் பத்திரிபுரத்தில் சேர்ந்து 1,000க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசிக்கின்றன. பாதை மூடப்பட்டதால், அவர்கள் அன்றாட தேவைகளுக்காக கூடுதலாக ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. தடைபட்ட சாலை பல தலைமுறை களாக பயன்படுத்தப்பட்ட இரண்டு கி.மீ. நேரான பாதையாக இருந்தது. வலங்கைமானின் பள்ளிகள், அரிசி ஆலைகள், அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்துடன் அவர்க ளின் குடியிருப்புகளை இணைக்கிறது. 800க்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வசிப்ப வர்களில் பெரும்பாலோர் தினசரி கூலித் தொழிலாளர்கள். நீண்ட பாதை அவர்களின் வாழ்க்கையில் நேரத்தையும் செலவையும் விரய மாக்குகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். “முன்பு சுவர் எழுப்பப்பட்டபோது கூட எங்களுக்கு ஒரு சிறிய திறப்பு இருந்தது. ஆனால் ஒரு திருட்டு சம்ப வத்திற்குப் பிறகு பாதை முழுமையாக மூடப்பட்டது. ஒரே ஒரு சம்பவத்திற்கு நாங்கள் அனைவரும் ஏன் தண்டிக் கப்பட வேண்டும்? இதுதான் எங்கள் உயிர்நாடி” என்று அந்தப் பகுதி யைச் சேர்ந்த தொழிலாளர்கள் தெரி விக்கின்றனர். உள்ளூர் ஆர்வலர்கள், ஆதிக்க சாதிக் குழுக்கள் மறைமுகமாக சுவரை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். “தலித்களுக்கு சுதந்திரமான அணுகல் கிடைத்தால் அப்பகுதியில் சொத்து மதிப்புகள் குறையும் என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. பெயரைத் தவிர மற்ற அனைத்திலும் இதை தீண்டாமைச் சுவராக நாங்கள் பார்க்கி றோம்,” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் முரளி கே. கூறுகிறார். ஆனால்  நிலத்தை உருவாக்கிய ஜே. ஜெகபார் அலி இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார். “இது எனக்குச் சொந்த மான பட்டா நிலம், பொதுவான பாதை அல்ல” என்கிறார்.  அதிகாரப்பூர்வ நடவடிக்கை செப்டம்பர் 26, 2024 அன்று வலங்கைமான் தாசில்தாரால் கூட்டப்பட்ட அமைதிக் குழுக் கூட்டம் இந்த சர்ச்சையை ஒப்புக்கொண்டது. ஆக்கிரமிப்பை சரிபார்க்க பொ துப்பணித்துறை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இது தொடர்பாக இப்போது பட்டிய லின மக்கள் சுட்டிக்காட்டி நியாயம் கேட்ட போது, தற்போதைய தாசில்தார் கே. ஓம் சிவகுமார், நிலத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு சிறப்பு தாசில்தாருக்கு கடிதம் எழுதியதாகக் கூறினார். மாவட்ட வருவாய் அதிகாரி பி. கலைவாணி இந்த விவகாரம் குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கை களை எடுப்பதாக கூறினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்ட பின்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் இது பொதுப் பாதை ஆக்கிரமிப்பு மற்றும் தீண்டாமைச் சுவர் என்பதை உறுதிப்படுத்துகின்றனர். அண்மையில் கரூர் மற்றும் திருவள்ளூரில் தீண்டாமை தடுப்புச் சுவர்கள் அதிகாரிகள் தலையீட்டின் பின் இடிக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்தச் சுவரும் இடிக்கப்படுமா என்பதே இப்போதைய கேள்வி.