கோவில் வழிபாட்டு உரிமை வேண்டும் வடவாளம் பட்டியலின மக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை, ஜூலை 8- புதுக்கோட்டை மாவட்டம் வட வாளம் ஊராட்சிக்குட்பட்ட 6 கிராமங் களைச் சேர்ந்த பட்டியலின மக்கள், தங்களுக்கு அப்பகுதியிலுள்ள கோவிலில் வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்துள் ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், வடவாளம், இச்சடி அண்ணாநகர், கண்டங்காரப்பட்டி, சின்னையாசத்திரம், செட்டியாப்பட்டி, காயாம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மக்கள் அளித்த மனுவில், வடவாளம் ஊராட்சிக்குட்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மக்கள் சுமார் 1,200 குடும்பங்கள் வசித்து வரு கிறோம். இங்குள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிலுள்ள ஸ்ரீசெல்லாயி அம்மன் மற்றும் ஸ்ரீகலியுக மெய்யர் அய்ய னார் கோவிலில் எங்களை ஒரு எல்லைக்குள் நிறுத்திவிடுவார்கள். கோவிலுக்குள் சென்று வழிபட உரி மையில்லை. திருவிழாக் காலங்களில் தண்ணீர்ப் பந்தல் அமைக்க விடுவ தில்லை. பால்குடம், காவடி, பூ எடுக்க அனுமதிப்பதில்லை. சமநீதி யை வழங்கும் வகையில், கோவில் வழி பாட்டு உரிமையை வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண் டும். மேலும், பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.