tamilnadu

ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள்

ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்கள்

ஈரோடு, ஆக. 30- ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி  துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. அம்மாபேட்டை, அந்தியர், பவானி சாகர், கோபி, கொடுமுடி, நம்பியூர், சத்தி மற்றும் தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத் தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங் கள் காலியாக உள்ளன. இனசுழற்சி முறையில் இவ்விடங்கள்  நிரப்பப்பட உள்ளன. இது தொடர்பான விபரங்கள் WWW.tnrd.tn.gov.in என்ற முகவரியில் பெறலாம். விண்ணப் பங்கள் இணைய தள வாயிலாக மட்டும் ஏற்கப்படும். விண் ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 30  என மாவடட ஆட்சியர்  விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மின்தூக்கியிலிருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

கோவை, ஆக.30- சிகரெட் மொத்த விற்பனைக் கடையின் மின்தூக்கியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவர்  கோவையில் தங்கி, ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள சிகரெட்  மொத்த விற்பனைக் கடையில் பணியாற்றி வந்தார். சனியன்று  சுரேஷ் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  சிகரெட் பண்டல்களை மின்தூக்கியில் ஏற்றி மேலே கொண்டு  செல்ல முயற்சி செய்தார். அப்போது மின்தூங்கியில் இருந்து  திடீரென தவறி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு கடையில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது சுரேஷ் தலையில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவர்கள், சுரேசை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை  பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர் பாக பெரிய கடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

பால் கொள்முதலை அதிகரிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

ஈரோடு, ஆக. 30- ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி ஆய்வு  மேற்கொண்டார். அப்போது, பால் கொள் முதலை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி னார். ஆய்வின்போது, பால் பண்ணையின் பல்வேறு பிரிவுகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர், பால் பதப்படுத்துதல், வெண் ணெய், நெய், பால் பவுடர் மற்றும் பால் கோவா உற்பத்தி ஆகிய பிரிவுகளின் செயல் பாடுகளை ஆய்வு செய்தார். பால் உற் பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த, மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறி வுரை வழங்கினார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் நடந்த  ஆய்வுக் கூட்டத்தில், ஆவின் ஒன்றியத் திற்கு நிர்ணயிக்கப்பட்ட பால் கொள்முதல் இலக்கான ஒரு நாளைக்கு 1 லட்சத்து 85  ஆயிரம் லிட்டர் அளவை எட்ட வேண்டும் என  வலியுறுத்தினார். இதற்காக, புதிய பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை அமைத்து, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்றும், நலிவடைந்த சங்கங் களை மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் புன ரமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித் தார். மேலும், பால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான கறவை மாட்டுக்கான கடன்,  பராமரிப்புக் கடன் மற்றும் காப்பீடு வசதிகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர் கேட் டுக்கொண்டார். ஆவின் பால் விற்பனையை  அதிகரிக்க, மக்கள் அதிகம் கூடும் இடங்க ளில் புதிய பாலகங்கள் அமைக்கவும் அவர்  அறிவுறுத்தினார்.

குடியிருப்புக்குள் உலாவிய கரடி

நீலகிரி, ஆக.30- கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை வீட்டில் வளர்க்கப்படும் நாய், விரட்டிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக உணவு மற்றும் தண்ணீர்  தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும்  சாலை ஓரங்களில் கரடிகள் உலா வருகிறது. இந்நிலையில் கோத்தகிரியில் தனியார் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று  உணவு தேடி உலா வந்தது. அப்போது வீட்டில் வளர்க்கப்ப டும் நாய் ஒன்று கரடியை விரட்டிய சிசிடிவி காட்சிகள் தற் போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்  அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரியும்  கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையி னர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பால் கொள்முதலை அதிகரிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

ஈரோடு, ஆக. 30- ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி ஆய்வு  மேற்கொண்டார். அப்போது, பால் கொள் முதலை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி னார். ஆய்வின்போது, பால் பண்ணையின் பல்வேறு பிரிவுகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர், பால் பதப்படுத்துதல், வெண் ணெய், நெய், பால் பவுடர் மற்றும் பால் கோவா உற்பத்தி ஆகிய பிரிவுகளின் செயல் பாடுகளை ஆய்வு செய்தார். பால் உற் பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த, மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறி வுரை வழங்கினார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் நடந்த  ஆய்வுக் கூட்டத்தில், ஆவின் ஒன்றியத் திற்கு நிர்ணயிக்கப்பட்ட பால் கொள்முதல் இலக்கான ஒரு நாளைக்கு 1 லட்சத்து 85  ஆயிரம் லிட்டர் அளவை எட்ட வேண்டும் என  வலியுறுத்தினார். இதற்காக, புதிய பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை அமைத்து, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்றும், நலிவடைந்த சங்கங் களை மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் புன ரமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித் தார். மேலும், பால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான கறவை மாட்டுக்கான கடன்,  பராமரிப்புக் கடன் மற்றும் காப்பீடு வசதிகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர் கேட் டுக்கொண்டார். ஆவின் பால் விற்பனையை  அதிகரிக்க, மக்கள் அதிகம் கூடும் இடங்க ளில் புதிய பாலகங்கள் அமைக்கவும் அவர்  அறிவுறுத்தினார்.

முள்ளூரில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

உதகை, ஆக. 30 – முள்ளூரில் முகாமிட்டுள்ள காட்டு யானை களை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண் டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய  நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முள்ளூர், மாமரம், தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, இடு கரை ஆகிய பகுதிகளில் பலாப்பழம் விளைச் சல் அதிகரித்துள்ளது. இதனால், சம வெளிப் பகுதிகளிலிருந்து வரும் காட்டு யானைகள் கூட்டம், பலாப்பழங்களை உண் பதற்காக குடியிருப்புப் பகுதிகள், தேயிலைத்  தோட்டங்கள் மற்றும் சாலைகளில் பகல், இரவு என இரு நேரங்களிலும் நடமாடி வரு கின்றன. தற்போது முள்ளூர் பகுதியில் தேயி லைத் தோட்டங்களிலும், பலாப்பழத் தோட் டங்களிலும் யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மனிதர் களை அச்சுறுத்தும் முன், வனத்துறையினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி, யானை களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.