நெல் கொள்முதல் நிலையங்களை வி.பி.நாகைமாலி எம்எல்ஏ ஆய்வு
நாகப்பட்டினம், அக். 23- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம், குருமனங்குடி, நீலப்பாடி, ஒக்கூர், கோகூர், வடகரை ஆனைமங்கலம் ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் நெல் கொள்முதல் நிலையங்களை கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி வியாழனன்று ஆய்வு செய்தார். தேங்கிக் கிடந்த நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகள் மூலம் ஏற்றச் செய்வதற்கான நடவடிக்கையை அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதாக அரசு அதிகாரிகள் உறுதியளித்து, நெல் மூட்டைகளை எடுத்து வருகின்றனர். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலியுடன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. சித்தார்த்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் துரைராஜ், எம்.ஜோதிபாசு, வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
