tamilnadu

அமெரிக்கா நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு

அமெரிக்கா நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு

அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வுக்கு அடிபணியக் கூடாது, அனைத்து நாடுகளுடனும் தங்குதடையின்றி வர்த்தகம் செய்ய வேண்டும், அமெரிக்கா உடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும்,  இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஆக.13) சென்னை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, ஐஎன்டியுசி தலைவர் சேவியர் உள்ளிட்டோர் பேசினர்.