ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தல்'
திருச்சிராப்பள்ளி, ஆக. 17- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்ட ஆண்டு பேரவை ஞாயிறன்று கல்லுபட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார். அஞ்சலி தீர்மானத்தை அருள்மொழி வாசித்தார். கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் தியாகராசன் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கை, தாலூகா செயலாளர் துரைப்பாண்டியன் வாசித்தார். வரவு செலவு அறிக்கையை கருமன் சமர்ப்பித்தார். விவசாய தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் அண்ணாத்துரை, மாதர் சங்க செயலாளர் கவிதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊரக வளர்ச்சி உள்ளாட்ச்சி துறை ஊழியர்களை தனியார் மயமாக்குவதை கைவிட்டு நிரந்தரப்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு பணிபதிவேடு பராமரிக்க வேண்டும். நலவாரிய பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. கூட்டத்தில் புதிய கெளரவ தலைவராக டி. இராமசாமி, தலைவராக பி.சக்திவேல், செயலாளராக பி.துரைபாண்டியன், பொருளாளராக கருமன், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் தலா 3 பேர் உட்பட 25 பேர் கொண்ட புதிய வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து நிறைவுரை ஆற்றினார். துணைத் தலைவர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.