கிராம வங்கிகளை தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 26 - தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன், தமிழ்நாடு கிராம வங்கி ஆபிசர்ஸ் அசோசியேசன் 3 ஆவது மாநில மாநாடு திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு கிராம வங்கி ஆபிசர்ஸ் அசோசியேசன் தலைவர் அ.அண்டோ கால்பட் தலைமை வகித்தார். பெல் ஊழியர் சங்க தலைவர் எஸ்.ஸ்ரீதர் வரவேற்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், ஏஐஆர்ஆர்பிஇஏ அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ்.வெங்க டேஸ்வர ரெட்டி, டிஎன்ஜிபிடபுள்யுயு முன்னாள் பொதுச் செயலாளர் ஜா.மாதவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பிஇஎப்ஐ தமிழ்நாடு பொதுச் செயலாளர் டி.ரவி குமார், டிஎன்ஜிபி பொது மேலாளர் கண்ணன் பொன்னுராமன், டிஎன்ஜிபிஆர்எஸ் தலைவர் டி.கிருஷ்ணன், டிஎன்ஜிபிஓஏ பொதுச் செயலாளர் எஸ். அறிவுடைநம்பி, டிஎன்ஜிபிடபுள்யுயு ஒய்.அஸ்வந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில், கிராம வங்கிகள் விவசாயம், ஊரகத் தொழில்கள், சிறு தொழில்கள் ஆகிய வற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப் பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் கிராம வங்கிகள் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளன. பின்தங்கியுள்ள மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் கட னளித்து, வேலைவாய்ப்பை உருவாக்கி சமூக நீதியை நிலைநாட்டும் பணியை செய்துள்ளன. இந்த பணியால் கிராம வங்கிகள், மக்கள் நிறு வனங்களாக உருவெடுத்துள்ளன. இந்நிலையில் கிராம வங்கிகளை ஐ.பி.ஓ (பங்கு வெளியீட்டு முறை) வழியாக தனியார் முத லாளிகளின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, அனைத்து கிராம வங்கி ஊழியர்களையும் அலுவலர்களை யும் பழைய பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தமிழ்நாடு கிராம வங்கி ஆபீசர்ஸ் அசோசி யேசன் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். தலைவராக அ.அண்டோ கால்பட், பொதுச் செயலாளராக எஸ்.அறிவுடைநம்பி, பொரு ளாளராக ஆறுமுகப்பெருமாள், தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவராக அ.லட்சுமி நாராயணன், பொதுச் செயலாளராக ஒய். அஸ்வத், பொருளாளராக தங்க மாரியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். டிஎன்ஜிபி டபுள்யூ அ.லட்சுமிநாராயணன் நன்றி கூறினார்.