முஸ்லிம் மக்களை ஒடுக்க உ.பி., பாஜக அரசு தீவிரம்
]பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் மிலாடி நபியை (செப்., 4) முன்னிட்டு “ஐ லவ் முகமது” (i Love Mohammad) என்ற பேனர் வைக்கப் பட்டது. முஸ்லிம் அமைப்பினர் பேனர் வைத்தனர். ஆனால் உத்தரப்பிரதேச காவல்துறை எப்ஐஆர் பதிவு செய் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாட்டின் பல நகரங்களில் முஸ்லிம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி என்ற பெயரில் வன்முறையை தூண்டும் வகையில் ஆர்எஸ்எஸ் - பாஜக இந்துத்துவா குண்டர் கள் உத்தரப்பிரதேசத்தில் “ஐ லவ் மகா தேவ்” பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. இதற்கிடையே உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குப் பிறகு உத்த ரப்பிரதேச காவல்துறையின் அடாவ டியை கண்டித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் உத்த ரப்பிரதேச காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது இந்துத்துவா குண்டர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்த, வெடித்தது வன்முறை. ஆனால் காவல்துறையினர் கல்வீச்சு நடத்திய இந்துத்துவா குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அமைதியாக பேரணி நடத்திய முஸ்லிம் மக்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் பேரணி நடத்திய பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். அதே போல 1,700 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக வெள்ளிக் கிழமை அன்று போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த உள்ளூர் முஸ்லிம் மதத்தலைவரும், இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தௌகிர் ராசாவை காவல்துறையினர் சனி க்கிழமை அன்று கைது செய்தனர்.