tamilnadu

img

பல்கலை. பாடத்தில் ஜோதிடம், மநுவாத கருத்துக்களை பரிந்துரைப்பதா?

பல்கலை. பாடத்தில் ஜோதிடம், மநுவாத கருத்துக்களை பரிந்துரைப்பதா?

யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி மாணவர்கள் நகல் எரிப்பு -  முற்றுகைப் போராட்டம்

சென்னை, செப். 3 - பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடம் உள்ளிட்ட பிற்போக்கு கருத்துக்களை திணிக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி புதனன்று (செப்.3) மாநிலம் முழுவதும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. பல்கலைக் கழகங்களில் வணிக வியல், மானுடவியல், பொருளாதாரம், கணிதம், உடற்கல்வி, புவியியல், வேதி யியல், ஹோம் சயின்ஸ் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய 9 பாடத்திட்டங்களை மாற்ற பல்கலைக் கழக மானியக்கு குழு (யுஜிசி) முடிவெடுத்துள்ளது. அதற்காக ‘கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பாடத்திட்டம் (எல்ஓசிஎப்) என்ற வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாடத்திட்டத்தில் சாணக்கி யர், தீனதயாள் உபாத்தியாய போன்றோ ரின் கருத்துக்கள், ராமாயணம், மகாபா ரதம் போன்ற புராண கதைகள், தர்மம்,  கர்மா, மோட்சம், ஜோதிடம் போன்ற  அறிவியலுக்கு புறம்பான சிந்தனை கள், அர்த்த சாஸ்திரம், மநுதர்மம் போன்ற வற்றை புகுத்த அறிவுறுத்துகிறது. குருகுல கல்வி, மன்னராட்சி போர் தந்திரங்கள் என ஆர்எஸ்எஸ்-பாஜக வின் இந்துத்துவா கொள்கைகளை புகுத்த முயற்சிக்கிறது. இந்திய விடு தலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த வி.டி.சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட  வீரராகவும், அவர் எழுதிய புத்தகத்தை பாடமாகவும் சேர்க்க பரிந்துரைக்கிறது. எனவே, இந்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. இதனையொட்டி புதனன்று (செப்.3) மாநிலம் முழுவதும் கல்வி நிலை யங்களில் ‘வரைவு நகல் எரிப்பு’ போராட்ட த்தை மாணவர் சங்கம் நடத்தியது. சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மிருதுளா, செயலாளர் சம்சீர் அகமது, சென்னை மாவட்ட நிர்வாகிகள் ச.ஆனந்தகுமார், தமிழ், அகல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து வரைவு நகலை எரித்து முற்றுகையிட மாண வர்கள் முயன்றனர். அப்போது, சீருடை  அணியாத 12 காவலர்கள் போராட்டத் திற்குள் புகுந்து குழப்பத்தை உருவாக்கி, அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர். இதனால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாணவர்களை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, “செயற்கை நுண்ணறிவு, தொழில்புரட்சி 4.0 என்ற காலக்கட்டத்தில் வாழ்கிறோம். தற்காலச்சூழலுக்கு ஏற்ப நவீன பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். மாறாக, 2 ஆயிரம் ஆண்டு பழமைவாத மநுவாத சிந்தனையை புகுத்தவும், கல்வியை வணிகமயம்; காவிமயமாக்கவும் வரைவு அறிக்கை பரிந்துரைக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் நிராகரித்து ள்ள மநுவாதத்தை கற்க வேண்டுமென்று யுஜிசி கூறுவது ஏற்புடையதல்ல. விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த சாவர்க்கரைப் பற்றி எதற்காக அரசியல் அறிவியல் பாடத்தில் படிக்க வேண்டும்? எனவே, இந்த எல்சிஓஎப் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்” என்றார்.