tamilnadu

img

தொலைக்காட்சி நடத்தக் கூடாது

சென்னை, அக்.22- மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்த தடைவிதித்து ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசு கள், யூனியன் பிரதேசங்கள் தொலைக்காட்சிகளை ஒளிபரப்ப வும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசின் தக வல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசின் அனைத்து துறை களுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு  அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “ஒன்றிய அரசின் துறை களின், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு தொடர்பாக சேவை களை வழங்க தடை விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே ஒன்றிய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் ஒளிபரப்பிலுள்ள சேனல்கள் பொதுத்துறை ஒளிபரப்பு நிறு வனமான பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண் டும்.  ஒன்றிய, மாநில அரசுகளின் விநியோகம் சார்ந்த நிறு வனங்கள் டிசம்பர் 31, 2023க்குள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு நடத்தி வரும் கல்வி  தொலைக் காட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று தகவல் வெளி யாகி உள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வந்தால் கல்வி தொலைக்காட்சி பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிர சார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்கும் சூழல் உரு வாகும்.