2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரவேற்கும் வகையில், “அமைதியை முன்னேற்றும் விளையாட்டு” என்ற தலைப்பிலான அஞ்சல்தலைகளை ஐ.நா வினியோகிக்கும் என்று ஐ.நா அஞ்சல் நிர்வகம் ஜனவரி 14ஆம் நாள் அறிவித்தது. குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக ஐ.நா அஞ்சல்தலைகளை வினியோகிப்பது இதுவே முதல்முறையாகும். ருவான் ஃபெய்ஃபெய் என்னும் சீன ஓவியர் இந்த அஞ்சல்தலைகளை வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐ.நா அஞ்சல் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும், நியூயார்க், ஜெனீவா, வியன்னா ஆகிய இடங்களிலுள்ள இந்நிர்வாகத்தின் கடைகளிலும் இந்த அஞ்சல்தலைகளை வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் பாராட்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவரும், ஆஸ்திரேலியா ஒலிம்பிக் கமிட்டி தலைவருமான ஜான் டவ்லிங் கோட்ஸ் ஜனவரி பிற்பகுதியில் பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தை முன்னிட்டு சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை அவர் வெகுவாகப் பாராட்டினார். பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியில் கோட்ஸ் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கூறுகையில், இப்போட்டி அரங்குகளின் கட்டுமானமும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியும் மிகவும் சிறப்பாக உள்ளது என்றார். பெய்ஜிங்கைச் சென்றடைந்த ஆஸ்திரேலியா வீரர்கள், உள்ளூர் வைரஸ் பரவல் தடுப்புக் கொள்கை குறித்து புரிந்துணர்வையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் என்றார். குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கு தயாராகிறது சீனா பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. சீனா மீதான உலகின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற சீனா தயாராகியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங்வென்பின் 14ஆம் நாள் தெரிவித்தார். ஜனவரி 10ஆம் நாள், சி.ஜி.டி.என் எனும் சீன சர்வதேச தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த வட அமெரிக்க நிலையத்தால் வாஷிங்டன் தலைநகர் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கான விளம்பர நிகழ்ச்சியில், அமெரிக்க மக்கள் பலர், தங்களது எதிர்பார்ப்புகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இது குறித்து வாங் வென்பின் கூறுகையில்,இந்த விளம்பர நிகழ்ச்சியில் இருந்து, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு, உலகின் குளர்கால ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் பனி விளையாட்டு ஆர்வலர்களின் சிறந்த நிகழ்ச்சி என்று உணர முடிகிறது. எளிமை, பாதுகாப்பு மற்றும் சிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சீனா நடத்துவதன் மூலம், உலகிற்கு ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஆற்றலைக் கொண்டு வரும் என்று தெரிவித்தார்.