tamilnadu

img

ஐ.நா மனிதாபிமான அமைப்புகள் சவாலான சூழலை எதிர்கொள்கின்றன

ஐ.நா மனிதாபிமான அமைப்புகள் சவாலான சூழலை எதிர்கொள்கின்றன


நியூயார்க்,செப்.16- ஐ.நா மனிதாபிமான அமைப்பு கள் நிதி பற்றாக்குறை, பணிச்சுமை அதிகரிப்பு, ஆயுதத் தாக்குதல்கள் என சவாலான சூழலை சந்தித்து வருவ தாக மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண ஒருங்கி ணைப்பாளர் டாம் ஃபிளெட்சர் கவலை  தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா.  தலைமையகத்தில் செய்தியாளர்களி டம் பேசிய ஃபிளெட்சர், நிதிப் பற்றாக் குறையானது முன்பை விட மேலும் மோசமாகியுள்ளது. மனிதாபிமான அமைப்புகளுக்கு தேவையான நிதி யில் 19 சதவீதம் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 40 சதவீதம் வரை குறைவாகும் என்றார். உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ள மக்களுக்கு செய்ய வேண்டிய  மனிதாபிமான உதவி களுக்கு 45.5 பில்லியன் டாலர்கள் கேட்கப்பட்ட நிலையில் 8.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே இதுவரை ஐ.நா அவைக்கு கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.  உலகம் முழுவதும் 11.4 கோடி  மக்களின் உணவுக்கு 29 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கான நிதி கூட ஐ.நா அவைக்கு கிடைக்கவில்லை. இந்த தொகை யானது  உலகநாடுகள் 2025 ஆம் ஆண்டு ராணுவத்திற்காக ஒதுக்கும் செலவுகளில் சுமார் 1 சதவீதம் மட்டுமே. இவ்வாறு நிதி இல்லாத காரணத் தால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக் கான நிவாரணத் திட்டங்கள் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான மனிதாபிமான அமைப்புகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிதிப்பற்றாக்குறையின் காரணமாக 60 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலாமல் போக லாம். அதே போல 1.1 கோடி அகதி களுக்குத் தேவையான உதவிகள் கொடுக்க முடியாமல் போகலாம். அதே போல ஐ.நா மனிதாபிமான ஊழியர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. 2024 இல் 380 க்கும் மேற்பட்ட ஐ.நா மனிதாபி மான ஊழியர்கள் படுகொலை செய்ய ப்பட்டுள்ளனர். 2025 இல் இதுவரை 270 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  இத்தகைய சூழலில் ஐ.நா. அவை மிக சவாலான சூழலை எதிர்கொண்டு தான் தனது பணிகளை செய்து வரு கிறது என டாம் ஃபிளெட்சர் தெரிவித்துள்ளார்.