போனஸ் உச்சவரம்பை நீக்க டிஆர்இயு வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, செப்.10 - போனஸ் உச்சவரம்பை நீக்க வேண்டும். 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூ. 2.65 லட்சம் கோடி. இதன் அடிப்படை யில் போனஸ் வழங்க வேண்டும். 8 ஆவது ஊதியக் குழுவை உடனே அமைக்க வேண்டும். சேப்டி கேட்டகிரி பிரிவில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயு சார்பில் செவ்வாயன்று திருச்சி ரயில்வே ஜங்ஷனில், ரயில்வே கோட்ட மேலாளர் அலு வலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கமர்சியல் கிளைத் தலைவர் குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆல் இண்டியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேஷன் தலைவர் கண்ணையன் துவக்கவுரை ஆற்றினார். கோட்டச் செயலாளர் கரிகாலன், கோட்ட தலைவர் சிவக்குமார், துணை பொதுச் செய லாளர் ராஜா, ஆப்ரேட்டிங் கிளைத் தலைவர் மோகன்ராஜ், கிளை துணைச் செயலாளர் தர்மராஜ் ஆகியோர் உரையாற்றினர்.