தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்
சங்க அங்கீகார தேர்தலில் ரயில்வே தொழிலாளர்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற டிஆர்இயூ சங்கத்திற்கு வழங்க வேண்டிய அங்கீகார வசதிகளை வழங்காமல் காலம் கடத்தும் நிர்வாகத்தின் பாரபட்ச போக்கை கண்டித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (ஜூலை 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் அ.ஜானகிராமன், பொதுச்செயலாளர் வி.அரிலால், துணைத் தலைவர் பேபி ஷகிலா, சென்னை டிவிஷன் செயலாளர் சீனிவாசன், ஒர்க்ஷ்ப் டிவிசன் செயலாளர் டி.அருண்குமார், கூடுதல் டிவிசன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சஜித் (பாலக்காடு), முருகேசன் (சேலம்), அனில்குமார் (திருவனந்தபுரம்), கரிகாலன் (திருச்சி), ராஜூ (மதுரை) ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.