tamilnadu

img

திருச்சி விற்பனைக் குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பெ.சண்முகத்திடம் வாழ்த்து

திருச்சி விற்பனைக் குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பெ.சண்முகத்திடம் வாழ்த்து

திருச்சி மாநகராட்சி நகர விற்பனைக் குழு தேர்தலில் இடதுசாரி கூட்டணியான சிஐடியு, ஏஐடியுசி அணி 6 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம், சிஐடியு சார்பில் வெற்றி பெற்ற விற்பனைக்குழு உறுப்பினர்கள் செல்வி, கணேசன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் மத்தியக் குழு உறுப்பினர் பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் சுவாமிநாதன், மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.