தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளி சிலைக்கு மரியாதை
தஞ்சாவூர், செப். 22- ஞாயிற்றுக்கிழமை காலை கவிஞர் தமிழ் ஒளி-யின் 102 ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பன்னீர் செல்வம் தலைமையில், தமிழ்ப் பல்கலைக்கழக, மொழிப்புல கட்டடத்தில் அமைந்ததுள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், முனைவர் சீமான் இளையராஜா, மக்கள் தொடர் அலுவலர் முனைவர் இரா.சு. முருகன், முனைவர் ரமேஷ் குமார் மற்றும் கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
