tamilnadu

img

கல்வியாளர் முனைவர் வே. வசந்திதேவி புகழஞ்சலி கூட்டம்

கல்வியாளர் முனைவர்  வே. வசந்திதேவி புகழஞ்சலி கூட்டம்

தஞ்சாவூர், ஆக.3 -  பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர், கல்வியாளர், பெண் உரிமை செயல்பாட்டாளர், முன்னாள் குடந்தை கல்லூரி முதல்வர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், முன்னாள் மகளிர் ஆணையத்தின் தலைவர் முனைவர் வே.வசந்தி தேவி ஆக.1 ஆம் தேதி காலமானார். அவரது உடல் சனிக்கிழமை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.   அம்மையாரின் நினைவை போற்றும் விதமாக, சனிக்கிழமை மாலை தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தலைமை தபால் நிலையம் அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசுப் பள்ளி பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா. அருணாச்சலம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிபிஐ மாவட்டச் செயலாளர் கோ.சக்திவேல், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தி.தனபால், விசிக தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.ஜெய்சங்கர், திராவிடர் கழகம் மாவட்டச் செயலாளர் அருணகிரி, திராவிடர் கழக ஒன்றியச் செயலாளர் ஜெகநாதன், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் அ.வெங்கடேசன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.அய்யப்பன், பூவை கல்வி வளர்ச்சிக் குழு கோவிந்தராஜ், ரெங்கசாமி, ஜெயராமன், நாகராஜ், அரசுப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் வடக்கூர் சுதாகர், தமுஎகச கிளைச் செயலாளர் வசந்தகுமார், சிபிஎம் கண்ணந்தங்குடி கிளைச் செயலாளர் லெனின், வழக்கறிஞர் காசி. விசுவநாதன் உள்ளிட்ட பலர் புகழஞ்சலி செலுத்தினர்.