சென்னை, பிப். 7 - சிவசங்கர் பாபாவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை வழங்க வும், சொந்த செலவில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறவும் அனுமதிக்க கோரி, அவரது சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள் ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இது குறித்து காவல்துறையும், சிறைத்துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு பிப். 11 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.