சென்னை, ஜன.31- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஞாயிறன்று புதிதாக 22,238 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை யில் 3,998 பேர். சென்னையில் மண்டலவாரியாக கொரோ னா பாதிப்பு விவரங்களை சென்னை பெரு நகர மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. திங்களன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் தற்போது 36,800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை யில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஞாயிறன்று 38,799 ஆகவும் சனிக்கிழ மையன்று 42,017 ஆகவும் இருந்தது குறிப் பிடத்தக்கது. இதன்படி, இரு தினங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சுமார் 6,000 என்ற அளவில் குறைந்துள்ளது. சென்னையில் இதுவரை 8,936 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 7,29,463 ஆகவும் குணம டைந்தோர் எண்ணிக்கை 6,83,727 ஆகவும் உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டல ங்களில் அதிகபட்சமாக அடையாறு மண்டல த்தில் 3,708 பேரும்தேனாம்பேட்டை யில் 3,221 பேரும், கோடம்பாக்கத்தில் 3,184 பேரும் அண்ணா நகரில் 3,104 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.