61 நாட்களாக தொடர்ந்து போராடும் போக்குவரத்து தொழிலாளர்கள்
விருதுநகர், அக்.17- பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்ப டையில் பணி வழங்க வேண்டும். வரவுக்கும் செல வுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே பணப் பலன்களை வழங்க வேண்டும. ஓய்வு பெற்ற தொ ழிலாளர்களுக்கு மருத்து வக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொ ழிலாளர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தொடர்ந்து 61வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பணிமனை முன்பு நடைபெற்ற இப் போராட்டத்திற்கு எம்.காத் தப்பன் தலைமையேற்றார். ஏஐபிடிபிஏ மாண்டல பொ ருளாளர் எம்.பெருமாள் சாமி துவக்கி வைத்துப் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் எம்.அசோகன், நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஜி.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் போஸ் ஆகியோ பேசினர். மேலும் இதில் பாண்டியராஜ், பாலசுப்பு, அழகர்சாமி, ராஜகோபாhல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
