tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களின் போராட்ட வெற்றி விழா!

போக்குவரத்து ஊழியர்களின் போராட்ட வெற்றி விழா!

ஈரோடு, அக்.22- 62 நாள் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தின் வரலாற்று வெற்றி பெற்றதை  கொண்டாடும் வகையில் நிலையில், புத னன்று வெற்றி விழா நடைபெற்றது. சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங் கம் மற்றும் ஓய்வூதியர் நல அமைப்பு நடத்திய  தொடர் காத்திருப்பு போராட்ட வெற்றி விழா  புதனன்று 2003க்குப் பின் பணியில் சேர்ந்த வர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  ஊதிய ஒப்பந்த அரியர்ஸ் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன்கள் மற்றும்  மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.18 ஆம் தேதி முதல் மண்டல தலைமை அலுவல கம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 61ஆம் நாள் போராட்டத்தின் போது துறை அமைச்சர் அளித்த உறுதியின்படி, 62 ஆம் நாள் போராட்டம் வெற்றி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதனன்று ஈரோடு மண்டல தலைமை அலுவலகம் முன்பு வெற்றி விழா நடைபெற்றது. போக்குவரத்து சங்க  மண்டலத் தலைவர் எஸ்.இளங்கோ மற்றும்  ஓய்வூதியர் நல அமைப்பின் தலைவர் பி. ஜெகநாதன் ஆகியோர் தலைமை விகித்த னர். செங்கொடிகள் மற்றும் வெற்றி பதாகை களை கையில் ஏந்தியபடி மண்டல தலைமை  அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்ற னர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச் சியைப் பகிர்ந்தனர். போராட்டத்தின் வெற்றியைப் பற்றி பன் முக தலைவர் என்.முருகையா எடுத்துரைத் தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன், செயலாளர் கே.மாரப்பன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க ஒற்றுமையை வலியு றுத்தி வெற்றி முழக்கங்களுடன் நிர்வாகி கள், பணியில் இருப்போர் மற்றும் ஓய்வூதி யர்கள் திரளானோர் கலந்து கொண்டு வெற்றி யைக் கொண்டாடினர். முடிவில், போராட்டத் தில் பங்கேற்ற, உதவிய, ஒத்துழைப்பு வழங் கிய சகோதர அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.