போக்குவரத்து ஊழியர்-ஓய்வூதியர் போராட்டம் தொடர்கிறது! மெட்ரோ தொழிலாளர்களும் போராடும் நிலை : அ.சவுந்தரராசன் பேச்சு
சென்னை, ஆக.22 - போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாய மான கோரிக்கைகளை அரசு கவனிக்க வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் வலியுறுத்தினார். பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற தொழிலா ளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவ லகங்கள் முன்பு தொழிலாளர்கள் அமைதியான காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மே ளனம் (சிஐடியு) மற்றும் ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெறு கிறது. போராட்டம் தொடங்கியதும், ஓய்வுபெற்ற வர்களுக்கு பண உதவி வழங்க ஒரு பகுதி நிதி ஒதுக்கி அரசு, அரசாணை வெளியிட்டது. மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாம் நாளாக வெள்ளிக்கிழமை (ஆக.22) 22 மையங்களில் போராட்டம் நடைபெற்றது. ரூ.20 ஆயிரம் கோடி வடபழனி பணிமனையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசியதாவது: “தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு உரிய நிதியை வழங்க கோரி போராடுகிறோம். ஓய்வூதியர்களுக்கு சொந்தமான ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பித் தர வேண்டும். ஓய்வுபெற்ற வர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக் கொடை உள்ளிட்ட பண பலன்கள் வழங்கப்பட வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடும் அவசியம். அனைவருக்கும் பழைய ஓய்வூதியம், வாரிசு வேலை உள்ளிட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அகவிலைப்படி உயர்வு, ஒப்பந்தப்படி நிலு வைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசுக்கு நான்கு வருட அவகாசம் வழங்கிய பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையிலேயே இந்த அமைதியான போராட்டம் நடைபெறுகிறது. தீபாவளிக்கு முன்பு இந்த கோரிக்கைகள் நிறை வேற்றப்பட வேண்டும். இல்லையெனில் தொழி லாளர்கள் மிகுந்த வருத்தத்துடன் பண்டிகையை கொண்டாட நேரிடும். எனவே, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால், அமைதியான காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடை பெறும்” என்றார். மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் நிலை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 2,000 பேரை ஒப்பந்த முறையில் வேலைக்கு எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோவில் பணியாற்றும் 2,000 தொழிலாளர்களில் 300 பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளிகள். மற்ற தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்ப டையில் பணியாற்றுகின்றனர். “சமூக நீதி மறுக்கப்படும் நிலையில் தொழி லாளர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. பணி நிரந்தரம் கோரி மெட்ரோ தொழிலாளர்களும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாக லாம்” என்றும் சவுந்தரராசன் தெரிவித்தார்.