காஞ்சிபுரம்,டிச.17- தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பாலாற்றில் 5500 கன அடி நீர் சென்று கொண்டி ருக்கிறது. இந்த நிலையில், காஞ்சிபு ரம் அருகே பெரும்பாக்கம் தரைப்பா லம் வெள்ளத்தில் உடைந்தது. தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் வட இலுப்பு, பிரம்மதே சம், நாடேரி, செய்யனூர், சீவரம், புதூர், சித்தனைகால் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றன. இதேபோல் வாலாஜாபாத்தி லிருந்து அவலூர் செல்லும் தரைப் பாலம் சேதமடைந்து பலவீனமாக உள்ளதால் கல்குவாரிக்கு செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தை உணராமல் அப்பகுதி மக்கள் மீன்பிடிப்பது புகைப்படம் எடுப்பது மற்றும் வாகனங்களில் சென்று வருகின்றனர். காஞ்சிபுரம் நகரம் வழியே செல்லும் வேகவதி ஆற்றில் கடந்த நான்கு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 4 தரைப் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் பின்புறம் உள்ள 10க்கும் மேற்பட்ட குடியிருப்பில் உள்ள 1000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக, வேகவதி ஆற்றின் வெள் ளத்தால் குடியிருப்புக்கு செல்லும் முக்கிய பாலம் அடித்து செல்லப் பட்டது. இதனால் அப்பகுதியில் வாழும் நெசவாளர் குடும்பங்கள் அவ்வழியே செல்ல முடியாமல் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக அவர்கள் ஆபத்து அறியா மல் ஆற்றில் இறங்கி கடந்து செல்லும் நிலை உள்ளது. கடந்த 20 ஆண்டுக ளுக்கும் மேலாக அப்பகுதியில் உயர் மட்ட பாலம் அமைத்து தர கோரி பலகட்ட போராட்டம் நடத்தியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.