உள்நாட்டுப் போரால் புலம்பெயர்ந்தவர்கள் 1000 பேர் பலியான சோகம்
சூடானில் பயங்கர நிலச்சரிவு
கார்டூம், செப். 2 - சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இவர்கள் உள் நாட்டுப்போரின் காரணமாக இடம்பெ யர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அகதிகளான மக்கள் சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் அந்நாட்டில் கடுமையான பஞ்சம், பட்டினி நிலவி வருகிறது. லட்சக் கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இந்த போரில் ஆயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை களுக்கு உள்ளாகியுள்ளனர். கடுமையான நிலச்சரிவு இந்நிலையில் டார்பூர் பகுதியில் உள்ள மர்ரா மலை அடிவாரத்தில் உள்ள தாராசின் என்ற கிராமத்தில் உள்நாட்டிற் குள் இடம்பெயர்ந்துள்ள ஆயிரக் கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந் தனர். அப்பகுதியில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் அந்த மலைப்பகு தியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணுக்குள் புதைந்த கிராமம் இதில் தாராசின் கிராமமே மண்ணுக் குள் புதைந்து போனது. அங்கு தங்கியிருந்த 1000-க்கும் மேற்பட்டோ ரும் மண்ணுக்குள் புதையுண்டு போயி னர். நிலச்சரிவு ஏற்பட்ட சில மணி நேரத்திற்கு பிறகு மீட்பு பணிகள் நடைபெற்றன. அதில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும் எத்தனை நபர்கள் உயி ருடன் மீட்கப்படுவார்கள் என கூற முடியாது. அப்படி மீட்கப்பட்டால் அது அதிசயம் தான் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.