உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல்!
கோவை, அக்.11- கோவை அவிநாசி சாலையில் புதிதாக ஜி.டி.நாயுடு உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்ட பிறகு, தற்போது உப்பி லிபாளையம் ரவுண்டானா பகுதியில் சனியன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை கட்டப் பட்ட இந்த உயர்மட்ட மேம்பாலம் சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நான்கு இடங்களில் ஏறுதளங்களும், நான்கு இடங்களில் இறங்குதளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்த அவிநாசி சாலை பழைய மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதை வழியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பந்தய சாலைப் பகுதிகளுக்குச் செல்ல உப்பிலி பாளையம் ரவுண்டானாவில் திரும்பிய வாகனங்களுடன், புதிதாகத் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் வந்த வாகனங்கள் உப்பிலிபாளையம் இறங்குதளத்தில் இறங்கி ரவுண்டானா பகுதியை அடைந்ததுமே நெரிசலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடும் நெரிசல் ஏற்பட்டதையடுத்து, புதிய மேம்பாலத் தில் வரும் வாகனங்கள் உப்பிலிபாளையம் வரை செல்ல அனு மதிக்கப்படவில்லை. அவை அனைத்தும் அண்ணா சிலை அருகே உள்ள இறங்குதளத்தில் இறக்கிவிடப்பட்டன. மேலும், உப்பிலிபாளையம் பகுதியில் வாகனங்கள் செல்லா மல் இருக்க மேம்பாலத்தில் தற்காலிகமாக தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. இந்தக் கடுமையான போக்குவ ரத்து நெரிசலைத் தொடர்ந்து, கோவை மாநகரப் போக்குவ ரத்து துணை ஆணையர் அசோக் குமார் மற்றும் அதிகாரி கள் உப்பிலிபாளையம் ரவுண்டானா பகுதியில் ஆய்வு மேற் கொண்டனர். “புதிதாகத் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் வாகனங்கள் இறங்கும் பகுதியான உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க நிரந்தர மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்.” மேலும், “பொது வாகப் புதிதாகத் திறக்கப்படும் பாலங்களில் வாகன ஓட்டி கள் அதிவேகத்தில் செல்வது வழக்கம். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து வாகனங்களும் இந்த மேம்பாலத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். அதிவேகத்தில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்தி செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோர் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். இதைக் கண்காணிக்கப் போக்குவ ரத்து காவல்துறையினர் அவ்வப்போது பாலத்தில் ரோந்து சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதி களை மதித்து, மெதுவாகச் சென்று விபத்துக்கள் நடப் பதை தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,” என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
