ஆடவர் ஒற்றையர் பிரிவில் கோப்பைக்காக முன்னணி வீரரும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெயினின் நடால், போராட்ட குணம் கொண்ட ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்கொள்கிறார்.
யாருக்கு வாய்ப்பு?
இரண்டு வீரர்களும் சூப்பர் பார்மில் உள்ளார்கள். இருந்தாலும் நடாலின் அனுபவம் அவருக்கு அனைத்து வாய்ப்புகளையும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெத்வதேவ் கடந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இறுதிக்கு முன்னேறி கோப்பையை பறிகொடுத்தார். இந்த முறை கோப்பையை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிரடியாகவும், போராட்டத்துடன் விளையாடி இறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இருவருக்கும் கோப்பை வெல்ல சாதகமான சூழல் உள்ளது. யாருக்கு வெற்றி தோல்வி என திடமாக கூற முடியாது.
மகளிர் இரட்டையர் (இந்திய நேரப்படி காலை 9:30)
கெர்ஜிசிகோவா - சினியாகாவா (செக்குடியரசு)
டெலீனா (கஜகஸ்தான்) - பியட்ரிஜ் மயா (பிரேசில்)
(இறுதி ஆட்டங்களை சோனி டென் வரிசைகளில் காணலாம்)