வாழ்விடங்களிலிருந்து பிடுங்கி எறிகிற வலி உணர்தல் வேண்டும்
கோவை மாவட்டம், பொள் ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மடியில் அமைந்திருக் கும் நவமலை கிராமம்.வெறும் கற் களையும், மரங்களையும் தாங்கிய ஒரு குக்கிராமம் அல்ல. அது, முப் பதுக்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்களின் மூச்சுக் காற்று; அவர் களின் தலைமுறை தலைமுறை யான வேர்கள் ஆழப் பதிந்திருக்கும் தாய்மண். அந்த மண்ணின் ஒவ் வொரு துகளும், அவர்களுக்கு வாழ் வின் பாடல்களைச் சொல்லும் ஒரு கோவில். ஆனால், இப்போது அந்தக் கோவில் கதவுகள் மூடப்படவிருக் கின்றன. தமிழக அரசு, மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து, ஆழி யாறு அருகே உள்ள நெல்லித்துறை மண்ணம் பகுதியில் இந்தக் குடும் பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் செல வில் புதிய குடியிருப்புகளை கட்டிக் கொடுக்கப்போவதாக அறிவித்துள் ளது. புதிய வீடுகள், அடிப்படை வசதி கள், போக்குவரத்து, மருத்துவ வசதி என அனைத்து அம்சங்களும் முழு மையாக நிறைவேற்றப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரில் வந்து உறுதியளித்தார். முதியோர்களுக்கான அரசுப் பணப் பலன்கள் சென்றடைவதையும் அவர் கேட்டறிந்துள்ளார். அரசு நிர்வாகத்தின் அத்தனை கரி சனமான அறிவிப்புகளுக்கும் மத்தி யில், நவமலை மக்களின் முகங்களில் ஆனந்தக் கண்ணீருக்குப் பதில், விடைபெறும் துயரமே வழிந்தோடுகி றது. வளர்ச்சித் திட்டங்களின் பெய ரால், அவர்களின் பாரம்பரிய வாழ் விடங்களிலிருந்து பிடுங்கி எறியப்ப டுவது, புதிய வலிகளை விதைக்கக் கூடாது. தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்த மண்ணை, ஆதிவாசிகளின் தொப்புள்கொடி உறவை, ஒரே இர வில் துண்டித்துக்கொண்டு புறப்படச் சொல்லும் இந்த முடிவு, அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி என்ற மூதாட்டி கூறுகையில், “நான் பிறந்ததும் இங்குதான். என் குழந்தை களும் வளர்ந்தது இந்த மண்ணில் தான். இந்தப் பிறவி முழுவதும் இருந்து பழகிய இந்த இடத்தை விட் டுச் செல்ல எங்களுக்கு மனமில்லை என்றார். இவரின் அச்சத்திற்கு அடிப் படையும் இல்லாமல் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுந்தரியின் குடும்பத்தைச் சேர்ந்த மகள், மரு மகன் உட்பட ஐந்து பேரை சாலை விபத்தில் பலிகொடுத்த துயரத்திலி ருந்து அவர்கள் இன்னும் மீள வில்லை. ஒருபுறம் இழப்பின் சோகம். மறுபுறம், கிராமத்தைச் சுற்றியுள்ள யானைகளின் தொடர் நடமாட்டம் குழந்தைகளுடன் வாழும் அவர்க ளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள் ளது. “பயம் இருக்கிறது உண்மை தான். ஆனால், வேறு வழியில்லை. அரசு கட்டித் தரும் புதிய வீடுகளில், இப்போது வாக்குறுதியளித்தது போல, மருத்துவமனை செல்லும் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முழுமையா கச் செய்து தரப்பட வேண்டும்,” என் றார். பூமி பூஜை விரைவில் நடைபெற வுள்ள நிலையில், நவமலை மக்கள், புதிய குடியிருப்பை நோக்கி அல்ல, தங்கள் தலைமுறைகள் புதைந்திருக் கும் மண்ணை நோக்கிப் பார்த்த படி, கனத்த இதயத்துடன் கண்ணீர் விடுகின்றனர். உறவைத் துறந்து, தாய் மண்ணை விட்டு பெயர்ந்து செல் லும் இந்த மலைவாழ் மக்களின் துய ரக் கண்ணீரை பார்த்தவர்கள், அவர் கள் பிழைக்க வழிகாட்டுங்கள்; ஆனால், பிறந்த மண்ணின் வாசம் மறையாமல் பார்த்துக்கொள்ளுங் கள் என்பதாய் இருக்கிறது அவர் களின் முகங்களில். ந.நி
