டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி
தஞ்சாவூர், செப். 13- டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற ஆதி திராவிடர், பழங்குடியி னத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட நிர்வா கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில்,“தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தேர்வு பயிற்சி நிறு வனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 – 2025 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தாட்கோ சார்பாக முதன்மைத் தேர்வி ற்கு பயிற்சி வழங்கப்பட வுள்ளது. இப்பயிற்சியில் சேர தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 2025ஆம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தேர்வர்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சிக் கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயிலு வதற்கான விடுதிக் கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com என்கிற தாட்கோ இணைய தளத்தில் பதிவு செய்ய லாம்’’ என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.