தமுஎகச இளைஞர்கள் கிளையில் மாநாடு
நாகப்பட்டினம், செப்.28- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நாகப்பட்டினம் கிளை மாநாடு, கிளைத் தலைவர் ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் என். பாபுராஜ் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். நிதிநிலை அறிக்கையை கா.காந்திநேசன் சமர்ப்பித்தார். மாவட்டத் தலைவர் ஆவராணி ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ஆதி.உதயகுமார், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டத் தலைவர் சிவனருட்செல்வன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தலைவராக என.பாபுராஜ், செயலாளராக எஸ்.மணி, பொருளாளராக கா. காந்திநேசன், துணைத் தலைவர்களாக முகமது ஆரிஃப், அன்புராஜ், யாழினி ஏகாம்பரி, துணைச் செயலாளர்களாக ஆ.மீ.ஜவகர், குருசாமி, எழிலரசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பாபநாசம் அருகே, அய்யம்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமில் கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர்கள் அய்யாராசு, தாமரைச் செல்வன், அய்யம்பேட்டை பேரூராட்சித் தலைவர் புனிதவதி, செயலாளர் அலுவலர் பழனிவேலு, திமுக அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் துளசி அய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
